சாமானிய மக்கள் முதல் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பாகுபாடு இல்லாமல் கொரோனா அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பொது முடக்கம் வந்து விடுமோ ? என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் கொரோனா தொற்று குறித்து விரக்தியுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
கொரோனா👽பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,
எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்👹
எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி,
உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்🔥
வாழ்க வளமுடன்— vijayantony (@vijayantony) January 10, 2022
அதாவது விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் “கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். யாராவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்… வாழ்க வளமுடன்!” என பதிவு போட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஏன் இவ்ளோ கோபம் ? என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.