உலகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர இருக்கும் தடுப்பூசிகளுக்கு பில்கேட்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபலமான தொழிலதிபர் பில்கேட்ஸ். இவர் உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ரூ. 1,27,19,27,12,500 என்ற தொகையை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் மூலம் நிதியுதவி அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் போலாந்து செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்பேட்டியில் “உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனால் எப்படியும் வரும் 2022க்குள் உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும், இதற்கு தடுப்பூசிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.