Categories
தேசிய செய்திகள்

உலகம் தோன்றிய நாள் தைப்பூசம்…. இதோ ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு!!!!

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது. குறித்து தேவாரப் பதிகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்காலச் சோழர் ஆட்சியில் தைப்பூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி 4 நாட்கள் கூத்துகள் நடத்துவதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இந்த தைப்பூசத்துக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இன்றைய தினம் தான் உலகம் தோன்றியது என்பது ஐதீகம். சிவபெருமான் உமையாளுடன் திருநடனம் ஆடுவது இத்தினத்தில்தான் என்பது நம்பிக்கை. மேலும் தைப்பூசத்தன்று முருகன் திருகாசுரனை வதம் செய்த நிகழ்வு பழனி கோவிலில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு சிறப்பு பெற்ற தைப்பூசம் தினத்தில் பக்தர்கள் அலகு குத்துதல், சர்க்கரை காவடி, தீர்த்த காவடி, பறவைக் காவடி, பால் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடி எடுத்தனர். இத்தினத்தில் முருக பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இந்த விரதம் நினைத்த காரியத்தை கைகூட செய்யும். இலங்கையில் தைப்பூச தினத்தில் கிழக்கு முகமாக நின்று தேங்காய் உடைத்து சூரியனை வழிபட்டு கதிர் அறுப்பார்கள். இந்த கதிர் முருகப்பெருமானுக்கு படைக்கப்படும். இத்தகைய சிறப்பு பெற்றது தைப்பூசம்.

Categories

Tech |