ஜெர்மனி தலைநகரான பெர்லினில் பணக்கார மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் பேசியது, பருவநிலை மாற்றம் மற்றும் கொரோனா ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பட்னி பிரச்சினை உருவாகியுள்ளது. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் போர் அந்த நிலைமையை மேலும் மோசமடைந்துள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க அமெரிக்க நாடுகளிலும் உரம், எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். அந்த நாடுகளில் அறுவடை பாதிக்கப்படும். அதனால் இந்த ஆண்டு பல நாடுகளில் பஞ்சம் அறிவிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனையடுத்து அடுத்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமடையும். அதாவது உணவு கிடைக்காத பிரச்சனை, உலக அளவில் உணவுத் தட்டுபாடாக மாறும். அது உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தும். எந்த நாடும் அதன் சமூக, பொருளாதார பின்விளைவுகளில் இருந்து தப்பவே முடியாது. எனவே இதனை சமாளிக்க அதிகாரிகள் ஒரு சமாதான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, உக்ரைன் நாடு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். எந்த கட்டுப்பாடும் இல்லாமல் உணவு, உரம் ஆகியவற்றை உலக சந்தைக்கு கொண்டு வர முடியும். மேலும் ஏழை நாடுகள் மீண்டுவர கடன் நிவாரணம் அளிக்கலாம். உலக உணவு சந்தையை ஸ்திரப்படுத்த தனியார்துறை உதவ வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.