அமெரிக்காவை மீண்டும் உலக நாடுகள் மதிக்கும் நாடாக மாற்றி காட்டுவேன் என புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் உறுதி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர் மக்கள் தெளிவான ஒரு முடிவை தந்திருப்பதாக கூறினார். மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு தலை வணங்குவதாக குறிப்பிட்ட பைடன் அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும் உலக நாடுகள் மீண்டும் நம்மை மதிக்கும் வகையில் தேசத்தை மாற்றி காட்டுவேன் என்று சூளுரைத்தார்.
நாட்டின் முதுகெலும்பாக திகழும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவேன் என்றும் கூறினார். நாட்டின் முதல் அயல்நாட்டு துணை அதிபர் என்ற பெருமையை பெற்றிருக்கும் கமலா ஹாரிஸ் உடன் இணைந்து பணியாற்றுவது தனக்கு கிடைத்த கௌரவம் என்றும் பைடன் அப்போது பெருமிதம் தெரிவித்தார்.