பிரித்தானிய நாட்டில் முடி சூடும் விழா ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டும் விழாவானது ஒரு மணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ராஜ குடும்ப வட்டாரத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் வெஸ்ட் மின்ஸ்டர் குரு மடாலத்தில் நடத்தப்படும் இந்த விழாவானது குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும் எனவும், ராணியாருக்கு சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக 4 மணி நேரம் வரையில் சடங்குகள் நீடிக்கும் என்ற நிலையில் தற்போது ஒரு மணி நேரத்திற்குள் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சிறப்பு விருந்தினர்கள் எண்ணிக்கையை 8,000 இருந்து 2,000 என குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் ராஜ குடும்பத்தில் விழாவுக்கான பாரம்பரிய உடைகளுக்கு பதிலாக விருந்தினர்களுக்கு ஏற்ற உடைகளை அணிய உள்ளனர். இந்நிலையில் மொத்த விழாவும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் தலைமையில் அல்லது முக்கிய பொறுப்பில் அவர் உட்படுத்தப்படுவார் என்றும் , கடந்த 70 ஆண்டுகளில் உலகம் மிகவும் மாறிவிட்டது எனவும் அதற்கு ஏற்றார் போல் முடிசூட்டு விழாவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என மன்னர் சார்லஸ் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.