Categories
அரசியல்

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம்…. இதில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?…. நீங்களே பாருங்க….!!!!

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த உலகிற்கு இந்தியா அளித்த கொடை தான் இந்த யோகா. நமது உடலையும், மனதையும்,உள்ளத்தையும் ஒருங்கிணைத்து அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்வது இந்த யோகாவின் தனிச்சிறப்பு ஆகும். நம் வாழ்க்கையின் சோகம், கோபம் மற்றும் பதட்டத்துடன் கூடிய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் உடல் தளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி,மூச்சுத்திணறல் மற்றும் மூட்டு வலி என ஒரு கட்டத்தில் அனைத்து நோய்களும் இவர்களை தாக்குகிறது.

அவற்றில் சிக்காமல் நமது உடலை பாதுகாப்பாக வைப்பதற்கு இந்த யோகா பயிற்சி உதவுகிறது. உடலுக்கு உகந்த உணவுடன் தேவையான உடற்பயிற்சியும் சேரும் போது உடலும் மனமும் மேலும் வலுவடைகிறது. ஆசனம், ப்ராணாயாமம்,தியானம் ஆகியவற்றை தொடர்ச்சியாக செய்து வந்தால் உடல் உறுப்புகள் அனைத்தும் தூய்மையாகி சீராக இயங்குகின்றன. உடலில் சீரான மூச்சுக்கும், நாடித் துடிப்புக்கும் யோகா பயிற்சி உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைத்து எப்போதும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

உடலையும் மனதையும் உறுதியாக்கி எதையும் தாங்கும் பக்குவத்தையும் நோய்களை நெருங்க விடாத எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு கிடைக்க செய்கின்றது. ஒருவரின் முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போட வைத்தே இளமையாக காட்டுகிறது இந்த யோகா பயிற்சி. உடல், மனம் மற்றும் ஆன்மாவை தூய்மையாக்கும் யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் செய்வது அவசியம். இதில் கிடைக்கும் நன்மைகளும் ஏராளம்.யோகாவின் சிறப்பை அனைவருக்கும் எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |