கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 15,297ஆக அதிகரித்துள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,49,090 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவை விட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 5,560 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் நிலைமை கைமீறி போனதால் அந்நாட்டு அரசு ராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வைரஸால் அமெரிக்காவில் 416 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 1,812 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28 ,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.