உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களை அறிய மைக்ரோசாஃப்டின் பிங்க் குழு புதிய இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மைக்ரோசாஃப்டின் பிங்க் குழு https://www.bing.com/covid என்ற இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? உயிரிழப்பு எத்தனை உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும் நாடுகள் வாரியாகவும் எண்ணிக்கை விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.