ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு சென்ற வருடத்தில் உலகளவில் அதிகமாக டிஜிட்டல் பணம் பயன்படுத்துபவர்களை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தி இருக்கிறது. அதாவது முதல் 20 இடங்களை பிடித்த நாடுகளை பட்டியலிட்டு இருக்கிறது. அதன்படி முதலிடத்தில் உக்ரைன் இருக்கிறது. அங்கு 12.7 % பேரிடம் டிஜிட்டல் பணம் இருக்கிறது.
இதையடுத்து ரஷ்யா, வெனிசுலா, சிங்கப்பூர், கென்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. இந்தியாவில் அதன் மொத்த மக்கள் தொகையில் 7.3 % பேரிடம் கடந்த வருடம் டிஜிட்டல் பணம் இருந்தது. இப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருக்கிறது. கொரோனா காலக் கட்டத்தில் வளரும் நாடுகள் உட்பட உலகம் முழுதும் டிஜிட்டல் பணத்தின் பயன்பாடு அதிகரித்து இருந்ததாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.