உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், 100 கோடி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கையானது உலக அளவில் செலுத்தப்பட்ட அளவுகளில் மூன்றில் ஒரு பங்காகும். மேலும் இம்மாத இறுதிக்குள் மொத்த மக்கள் தொகையில் 40% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சீனாவின் தாமதமாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.