Categories
உலக செய்திகள்

உலகளாவிய உணவு நெருக்கடி…. ரஷ்யா மீது கடும் கண்டனம்…. பாதுகாப்பான வழித்தடத்தை ஏற்படுத்த ஜெர்மனி கோரிக்கை….!!!

ரஷ்யா மீது ஜெர்மனி அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போர் தற்போது உக்ரைனில் உள்ள செவ்ரோடன்ஸ்க் நகரில் தீவிரமாக நடக்கிறது. இந்தப் போரினால் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கருங்கடலில் இருக்கும் உக்ரைனுக்கு சொந்தமான முக்கிய துறைமுகங்களை ரஷ்யா முடக்கியதால் ஐரோப்பிய நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு காரணமான ரஷ்யா மீது ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி அதிபர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் உணவு தானியங்கள் ஏற்றுமதியை பாதிக்கும் வகையில் ரஷ்யா துறைமுகங்களை முடக்கியுள்ளது என்றார். அதன்பிறகு உக்ரைன் பிரச்சினையில் ஒரு உடன்பாடு ஏற்படும் என ரஷ்யா நம்ப வேண்டும். இதனையடுத்து கருங்கடலில் இருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு பாதுகாப்பான வழித்தடங்களை அமைப்பதற்கு ரஷ்யா முன்வர வேண்டும்.

மேலும் உக்ரைன் நாட்டில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துவிட்டால் பழைய நிலைமை திரும்பி விடும் என அதிபர் புதின் நினைக்கிறார். ஆனால் உக்ரைனின் நிலங்களை ஒருபோதும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. மேலும் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு ஜெர்மனி உதவி செய்யும் என்றும், போரை நிறுத்துவது தொடர்பாக தொடர்ந்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், நானும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன் என்றும் கூறினார்.

Categories

Tech |