அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் நகரில் ரோபோடிக் அறுவை சிகிச்சை அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளையின் சார்பில் கேஎஸ் சர்வதேச ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கண்டுபிடிப்பு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், குழந்தை மருத்துவம், தலை மற்றும் கழுத்து, பெருங்குடல், கணைய அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், சிறுநீரகம் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 100 மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதிலிருந்து 3 பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி மிகப்பெரிய புற்றுநோய் ஆபரேஷன் செய்யும் வகையில் கழுத்தில் உள்ள நிணநீர் கணுக்களை நீக்கி, நோயாளிகளை விரைவில் குணமடைய செய்யும் ரோபோ தொழில்நுட்ப மருத்துரான பெங்களூருவைச் சேர்ந்த சந்தீப் நாயக்கருக்கு 2-வது பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் முதல் மற்றும் 3-வது பரிசுகள் முறையே அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பெற்றுள்ளனர்.