உலகின் உச்ச கட்ட பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட பறக்கும் வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை அமெரிக்காவின் அதிபர்களாக இருப்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட் ரஷ்யாவில் நடந்த மாநாட்டிற்கு பங்கேற்கச் செல்லும் பொழுது அமெரிக்க அதிபருக்கு என்று தனி விமானம் பயன்படுத்தும் வழக்கம் தொடங்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் எல்சன் ஓவர் சென்ற விமானம் சிக்னல் கோளாறு காரணமாக வழிதவறி வர்த்தக விமானங்கள் செல்லும் வழித்தடத்தில் சென்றது.
அதன் பிறகுதான் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் விமானங்களை அதிக பாதுகாப்பு கொண்ட விமானங்களாக மாற்றியமைத்தனர்.இதனால் இதனை ஏர் போர்ஸ் ஒன் சிறப்பு விமானம் என்று அழைக்கப்பட்டது. அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் இந்த விமானம் போயிங் 7472 டபுள் ஜீரோ ஜெட் ரக விமானம். இது மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். பறக்கும்போதே எரிபொருளை இதில் நிரப்பிக் கொள்ள முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் இது 20 மணிநேரம் இடை நிற்காமல் செல்லும்.
ஏர்போர்ட் விமானம் 232 அடி நீளம், 33 அடி உயரம் கொண்டது. இந்த விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க அதிபரால் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்க முடியும். அணுஆயுதம் பயன்படுத்தவும் முடியும். வெள்ளை மாளிகைக்கு இணையான அனைத்து வசதிகளும் இந்த விமானத்தில் செய்யப்பட்டிருக்கும். இந்த விமானம் அனைத்து தாக்குதல்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு மிகவும் பாதுகாப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.