Categories
உலக செய்திகள்

உலகின் அதிவிரைவான ரயில்…. சீனாவில் அறிமுகம்…. அசரவைக்கவும் சிறப்பம்சங்கள்….!!!!!

உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் தலைநகர் பீஜிங் முதல் ஷாங்காய் வரையில் இயக்கப்படுகிறது. புக்ஸிங் என்ற இந்த ரயிலானது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதன் மூலம் பீஜிங் முதல் ஷாங்காய் வரையிலான 1,250 கிலோமீட்டர் தூரத்தை 4 மணி 28 நிமிடங்களில் கடக்க முடியும். பயண நேரம் பெருமளவு குறைந்துள்ளது. பீஜிங் – ஷாங்காய் ரயில் சேவையை தினசரி சுமார் 5,05,000 பேர் பயன்படுத்தி வருகின்றன.

இந்த புதிய புல்லட் ரயிலானது அதிக தொழில்நுட்ப வசதிகளுடன், பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் முதல் அதிவேக ரயில் ஆகஸ்ட் 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் 2011-ம் ஆண்டு இரண்டு ரயில்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, ரயில் வேகம் 250-300 ஆக குறைக்கப்பட்டது.

புக்ஸிங் புல்லட் ரயிலின் சிறப்பு அம்சங்கள்:-
மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
முந்தைய புல்லட் ரயிலை விட மணிக்கு 50 கிலோமீட்டர் கூடுதல் வேகத்தில் செல்லும்.
பீஜிங் – ஷாங்காய் வரையிலான 1,250 கிலோமீட்டர் துரத்தை 4 மணி 28 நிமிடங்களில் கடக்க முடியும்.
புல்லட் ரயிலின் ஆயுட்காலம் 30 ஆண்டுகள்.
பீஜிங் – ஷாங்காய் ரயில் சேவையை தினசரி சுமார் 5,05,000 பேர் பயன்படுத்துகிறார்கள்.
செப்டம்பர் 21-ம் தேதி முதல் தினசரி இயக்கப்படும்.
அவசரநிலை ஏற்பட்டால் ரயிலின் வேகம் தானாக குறையும்.
முற்றிலும் சீனாவிலேயே வடிவமைக்கப்பட்டது.
வைஃபை வசதி உள்ளது.

Categories

Tech |