வாஷிங்டனில் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அனோகோயிக் என்ற அறை அமைந்துள்ளது. இந்த அறை உலகின் அமைதியான அறை என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இந்த அறை மிகவும் அமைதியாக இருக்கும். இந்த அறையில் இதுவரை 45 நிமிடங்களுக்கு மேல் எந்த ஒரு மனிதரும் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் இந்த அறையில் இருக்கும் போது நம்முடைய இதயத்துடிப்பும் காதுகளுக்கு கேட்கும். இந்த அறை கட்டி முடிப்பதற்கு 2 ஆண்டுகள் ஆனது. மேலும் இந்த அறையில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு மனநோய் வருவதாகவும் கூறப்படுகிறது.
Categories