உலகத்திலேயே ஆபத்தான 3 பாலங்கள் குறித்து பார்க்கலாம். கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் எல்லை தாண்டிய நதியாக மீகாங் ஆறு அமைந்துள்ளது. இது உலகின் 12-வது நீளமான நதி மற்றும் ஆசியாவின் 3-வது நீளமான நதி ஆகும். இந்த நதியில் 2 கயிறுகளால் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கயிறை பிடித்துக்கொண்டு ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு கடந்து செல்கின்றனர். இந்த கயிறு பாலத்தை மீன்பிடிப்பவர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் பிறகு பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஹூசைனி தொங்கு பாலம் கயிறுகளால் கட்டப்பட்ட ஆபத்தான பாலம் ஆகும். இந்தப் பாலம் 2 ஊர்களை இணைப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.
அதன்பிறகு சீன நாட்டில் உள்ள ஜாங்ஜீயாஜீ கண்ணாடிப் பாலமும் ஆபத்தான பாலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் பாலம் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் முழுவதுமாக கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது.