Categories
உலகசெய்திகள்

உலகின் உயரமான மனிதர்…. தன்னுடைய கைகளால் 2 உயிர்களைக் காப்பாற்றிய அதிசயம்…. என்ன நடந்தது தெரியுமா?…!!!!

உலகத்திலேயே மிக உயரமான மனிதன் தன்னுடைய கைகளினால் 2 உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

கடந்த 2006-ம் வருடம் உலகத்திலேயே மிக உயரமான மனிதன் என்று பவோர்சிஷன்‌ என்பவர் அழைக்கப்பட்டார். இவர் தன்னுடைய உயரமான கைகளை பயன்படுத்தி 2 டால்பின்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்பதை யாராலும் நம்ப முடியாது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு சீனாவில் உள்ள டால்பின் வளர்ப்பகத்தில்  உள்ள 2 டால்பின்கள் பிளாஸ்டிக்கை முழுங்கியுள்ளது. இந்த 2 டால்பின்களின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக்குகளை அகற்றுவதற்காக மருத்துவர்கள் கடுமையான பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் மருத்துவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனையடுத்து உயரமான மனிதனின் கைகளின் மூலமாக டால்பின்களின் வயிற்றில் இருக்கும் பிளாஸ்டிக்கை அகற்ற முடியும் என மருத்துவர்கள் நினைத்துள்ளனர். அதன்பிறகு உயரமான மனிதர் வரவழைக்கப்பட்டார். அவர் தன்னுடைய கைகளை பயன்படுத்தி டால்பின்களின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக்கை எடுத்தார். இவருடைய  செயலால் 2 டால்பின்களும் நலமுடன் இருக்கிறது.

Categories

Tech |