அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் புளும்பெர்க் நிறுவனம் உலகின் சிறந்த நகரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் அது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அவற்றில் இருப்பதாவது “உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பூங்காக்களை கணக்கீடு செய்யும் பணியானது நடைபெற்றது. அதன்பின் ஆய்வில் உலகின் 6 சிறந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூருவானது தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூரு நகரம் புது தொழில்கள் துவங்க உகந்த இடமாக திகழ்கிறது” அதில் கூறப்பட்டிருந்தது.