உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களின் கியூ.எஸ் தரவரிசை பட்டியலில் 12 இந்திய கல்வி நிலையங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் 2021 ஆம் ஆண்டுக்கான கியூ.எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி “உலகின் டாப் 100 தர வரிசை பட்டியலில் பாம்பே ஐஐடி, டெல்லி ஐஐடி, சென்னை ஐஐடி, காரக்பூர் ஐஐடி, பெங்களூர் ஐஐடி, கவுகாத்தி ஐஐடி, பெங்களூர் ஐஐஎம், ஆமதாபாத் ஐஐஎம், ஜேஎன்யூ, அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகிய 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.
இதனடிப்படையில் சென்னை ஐஐடி 30வது இடத்தையும், பாம்பே ஐஐடி 41 வது இடத்தையும், ஐஐடி காரக்பூர் 44 ஆவது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 50 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் கூறியதாவது “கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா உயர் கல்வியில் சீர்திருத்தத் வளர்ச்சிக்கான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இதனால்தான் உலக அளவில் புகழ்பெற்ற கியூ.எஸ் போன்ற மதிப்புமிக்க தர வரிசையில் இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்றுள்ளதாக” புகழாரம் சூட்டியுள்ளார்.