Categories
உலக செய்திகள்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு…. தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் நாடு…. காரணம் கேட்ட ஆடிப்போயிருவீங்க…!!

இந்த ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகளின் சபை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தொடர்ந்து நான்காண்டுகளாக மற்ற நாடுகளை விட 100 புள்ளிகள் முன்னிலையில் பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும்  ஐஸ்லாந்து (2), டென்மார்க் (3), ஸ்விட்சர்லாந்து (4), நெதர்லாந்து (5), பிரிட்டன் (17), பிரான்ஸ் (21), அமெரிக்கா (19), ஜப்பான் (56), சீனா (84), ரஷ்யா (76), ஈரான் (118), இலங்கை (129), பாகிஸ்தான் (105), இந்தியா (139) இடத்தையும் பிடித்துள்ளது. இது குறித்து பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் ஹெல்லிவெல் கூறியதாவது இந்த பட்டியலானது மக்களின் வாழ்வில் கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  பின்லாந்து நாட்டில் கொரோனா பரவலின் போது நாட்டு மக்கள் ஒரு மனதுடன் அரசின் மேல் நம்பிக்கை வைத்ததும், ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருப்பதும் தான் அந்நாடு முன்னிலையில் இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. மேலும் அந்நாட்டு மக்கள் கொரோனா பரவலின் போது தங்களின் வாழ்வில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியது தன்னை ஆச்சரியப்பட வைத்துள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |