Categories
தேசிய செய்திகள்

“உலகின் மிகப்பெரிய இந்து கோவில்”…. நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமிய குடும்பம்…. குவியும் பாராட்டு…..!!!!!

உலகின் மிகப் பெரிய இந்து கோவில் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியினை  பாட்னாவை மையமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் செய்து வருகிறார். பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்திலுள்ள கைத்வாலியா பகுதியில் “விராட் ராமாயண் மந்திர்” கோவில் அமைய இருக்கிறது. இது 215 அடி உயரம் உள்ள கம்போடியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் வளாகத்தைவிட உயரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பீகாரிலுள்ள ஒரு முஸ்லீம் குடும்பம் இக்கோவிலை கட்ட ரூபாய் 2.5 கோடி மதிப்புள்ள நிலத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது தொடர்பாக அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நிலத்தை நன்கொடையாக வழங்கிய இஷ்தியாக் அகமது கான் குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர் இக்கோவில் கட்டுவதற்காக தன் குடும்பத்திற்கு சொந்தமான ரூபாய் 2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இது சமூக நல்லிணக்கம் மற்றும் இருசமூகங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்திற்கு சிறந்த உதாரணம்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |