2017 ஆம் வருடம் பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கியது. தற்போது பிரித்தானியாவை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி இருக்கிறது. பிரித்தானியாவின் பார்வையில் சொல்லப்போனால் பிரித்தானியா ஒரு இடம் கீழ இறங்கி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையை அடைந்திருக்கின்றது. விலைவாசி உயர்வால் தடுமாறிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவில் புதிய பிரதமர் பொறுப்பேற்க இருக்கின்ற சூழலில் இது பிரித்தானியாவிற்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகின்றது.
மேலும் 2021 ஆம் வருடம் இறுதி காலாண்டில் இந்தியா பிரித்தானியாவை முந்தி இருக்கின்றது. இந்த கணக்கீடு அமெரிக்க டாலர்கள் அடிப்படையில் ஆனதாகவும் 2024 வரை பிரித்தானியா பொருளாதார பின்னடைவை சந்திக்கும் என இங்கிலாந்து வங்கி கனித்துள்ள நிலையில் இந்திய பொருளாதாரமும் இந்த வருடம் 7 சதவீதம் வளர்ச்சியும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 10 வருடங்களுக்கு முன் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் பிரித்தானியா ஐந்தாவது இடத்திலும் இந்தியா 11-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது இந்திய ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது ஒரு இடம் கீழ் தள்ளப்பட்டிருக்கிறது. மேலும் பட்டியலின் முதல் நான்கு இடங்களில் முறையை அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இருக்கின்றது.