அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடி விண்வெளி நிறுவனம் ஆகியவை இணைந்து உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி’ தொலைநோக்கி உருவாக்கியுள்ளனர். இந்த தொலை நோக்கியை பூமி தனித்துவமானதா? த பூமியை போன்று கிரக அமைப்புகள் இருக்கிறதா? பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் இருக்கிறோமா? ஆகிய கேள்விகளுக்கு பதில் தேடுவதற்காக விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த தொலைநோக்கியானது தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஏவுதளமான பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜேம்ஸ் வெப்ப தொலைநோக்கி விண்வெளியில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்கிறது என்று நாசா கூறியுள்ளது பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள அதன் இறுதி இலக்கு நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொலை நோக்கியால் நட்சத்திரங்கள் மற்றும் கிரக அமைப்புகள் எவ்வாறு உருவாயின மற்றும் அண்டசராசரம் குறித்த தகவல்களை சேகரிக்க முடியும். மேலும் பிரபஞ்ச ரகசியம் தோற்றம் தொடர்பான பல கேள்விகளுக்கான விடை இந்த தொலைநோக்கி மூலம் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதுவரை அனுப்பப்பட்ட தொலைநோக்கிகளை விட மிக தொலைவுக்கு இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.