Categories
உலக செய்திகள்

“உலகின் மிகவும் அழுக்கான நபர்”..? 94 வயதில் காலமானார்….!!!!!

ஈரான் நாட்டில் தேஜ்கா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமவ் ஹாஜி என்பவர் வசித்து வருகிறார். அவரது உண்மையான பெயர் தெரியவில்லை. இந்த நிலையில் அவர் பூமியில் ஒரு பகுதியில் குழி தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். இதனால் கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்த நிலையில் செங்களால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளனர் அதிலேயே அவர் பல காலம் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் நோய் தாக்கி விடும் என்ற அச்சத்தில் அவர் பல வருடங்களாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார் அவரது இளமைக்காலத்தில் ஏற்பட்ட உணர்வு பூர்வ பின்னடைவுகளே வித்தியாசமுடன் அவர் நடந்து கொள்வதற்கான காரணம் என அந்த பகுதியில் வசித்தவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2014 ஆம் வருடம் தெஹ்ரான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, ஹாஜி புதிதாக சமைத்த உணவுகளை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக அழுகிப்போன முள்ளம்பன்றி இறைச்சியை சாப்பிடுவதுடன் விலங்குகளின் கழிவில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை புகைக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார் என கூறியுள்ளது.

இந்த நிலையில் நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, அவரது கிராமவாசிகள் முதன்முறையாக ஒரு சில மாதங்களுக்கு முன் அவரை கட்டாயப்படுத்தி குளிப்பாட்டி விட்டுள்ளனர். இந்த நிலையில் ஹாஜி தனது கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்திருக்கின்றார் என கூறப்படுகிறது. பல வருடங்களாக குளியல் எடுத்துக் கொள்ளாமல் இருந்த உலகின் மிக அழுக்கான நபரின் அறியப்படும் ஹாஜி தனது 94 வது வயதில் காலமானார்.

Categories

Tech |