திபெத்தில் மிக உயரமான இடத்தில் கோளரங்கம் கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.
உலகின் கூரை என்றழைக்கப்படும் திபெத்தில் மிக உயரமான இடத்தில் கோளரங்கம் கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது . இங்கு கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன. இந்த கோளரங்கம் வரும் 2024 ஆம் ஆண்டு முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிரபஞ்சத்தை ஆராய்வதை நோக்கமாக கொண்டே சீனா இந்த கோளரங்கத்தை திறப்பதாக கூறப்படுகின்றது. இந்த கோளரங்கம் ஒரு மீட்டர் விட்டம் கொண்ட லென்ஸ் உடன் மிகப்பெரிய கண்ணாடி வானியல் தொலைநோக்கியை கொண்டிருக்கும். மேலும் வானியல் ஆராய்ச்சி மற்றும் பொதுஅறிவியல் கல்விக்கான முக்கிய தளமாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.