உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்த நான்காவது நாளில் தொடர் விபத்துகள் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரின் கைகளிலும் மொபைல் போன் வந்த பிறகு, பலரும் செல்பி மோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்ணை கவரும் வகையில், ஏதாவது ஒரு காட்சியை கண்டு விட்டால், அதற்கு முன் நின்று செல்பி எடுக்கும் பழக்கம் இன்று தொற்றிக்கொண்டு விட்டது. ஆழகான காட்சிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தவறில்லை. ஆனால்,
ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், உயிரைப் பறிக்கும் வகையிலும் சிலர் செல்பி எடுப்பது தான் தவறு. இதுபோன்ற செயல்களால் பல விபத்துக்கள் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில், இமாச்சல பிரதேசத்தில் மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில், அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் மோடி கடந்த மூன்றாம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் சுரங்கப்பாதை முன் நின்று செல்பி எடுக்க பலரும் விரும்புகிறார்கள் என்றும், இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக பார்டர் ரோடு ஆர்கனைசேஷன் தலைமை பொறியாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.