Categories
உலக செய்திகள்

உலகின் ராணுவ வலிமையில் முதல் இடத்தில் சீனா ..இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா ?

உலகின் ராணுவ வலிமையில் இந்தியா 4-வது இடத்திலும் பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டில் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிலிட்டரி டைரக்ட் இணையதளம் ராணுவத்திற்கான  படைக்கலன்கள், கருவிகள், நிதிஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சீனாவும் ,இரண்டாம் இடத்தில் அமெரிக்கா, மூன்றாம் இடத்தில் ரஷ்யா, நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது.மேலும்  ஐந்தாவது இடத்தில் பிரான்சும், ஒன்பதாவது இடத்தில் பிரிட்டனும் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோன்று பாதுகாப்பு துறை நிதி ஒதுக்கீட்டில் முதலிடத்தில் அமெரிக்கா, இரண்டாம் இடத்தில் சீனா, மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் வருடத்திற்கு 232 பில்லியன் டாலர் அமெரிக்கா செலவிடுவதாகவும், 260 மில்லியன் டாலர் சீனா மற்றும் 71 பில்லியன் டாலர் இந்தியா செலவிடுவதாகவும் கூறப்படுகிறது .

Categories

Tech |