நாம் பொதுவாக மயில்கள் தோகை விரித்து ஆடுவதை பார்த்து இருப்போம். அந்த மயில்கள் தோகை விரித்து ஆடுவதை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். இந்நிலையில் ஒரு சிலந்தி தோகை விரித்தாடும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இந்த உலகத்தில் பல அரிய வகை சிலந்தி இனங்கள் இருக்கிறது. அதில் பீகாக் என்ற சிலந்தி வகைகள் தோகை விரித்தாடும். இந்த சிலந்திகள் மயிலைப் போன்ற தோகை விரித்து ஆடும்.
இந்த அரிய வகை சிலந்திகள் ஆஸ்திரேலியா நாட்டில் காணப்படுகிறது. இந்த சிலந்திகள் ஜம்பிங் ஸ்பைடர் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இந்நிலையில் ஆண் மயிலை போலவே, ஆண் சிலந்திகள் மட்டுமே தோகை விரித்து ஆடும். இதில் பெண் சிலந்திகளுக்கு தோகை கிடையாது. மேலும் ஆண் சிலந்திகள், பெண் சிலந்திகள் கவர்வதற்காக தங்களுடைய தோகைகளை விரித்து ஆடும்.