பழமையான கண் மருத்துவமனை குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் கடந்த 1809-ம் ஆண்டு மார்பீல்டு கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை கடந்த 1819-ம் ஆண்டு சென்னையிலும் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையை டாக்டர் ராபர்ட் ரிச்சஸ்டன் என்பவர் தொடங்கினார். இந்த மருத்துவமனையானது தற்போது எழும்பூரில் இருக்கிறது. இந்த மருத்துவமனையை ஆங்கிலேயர் ஆட்சி முடிவடைந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது உலகின் 2-வது பழமையான கண் மருத்துவ மனையாகவும் திகழ்கிறது. இது தற்போது 204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த மருத்துவமனையில் தான் மெட்ராஸ் ஐ என்ற வியாதி கண்டுபிடிக்கப்பட்டது. இங்குதான் முதன் முதலில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 1926-ம் ஆண்டு கண் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டததுடன், கடந்த 1948-ம் ஆண்டு கண்வங்கியும் தொடங்கப்பட்டது. இங்குள்ள எலியட் மியூசியத்தில் 200 ஆண்டுகள் பழமையான மருத்துவ கருவிகள் மற்றும் புத்தகங்கள் போன்றவைகள் உள்ளது. இந்த மியூசியத்தை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. மேலும் 478 படுக்கையறை வசதிகள் உள்ள மருத்துவமனையில் தினந்தோறும் 600 முதல் 800 வெளி நோயாளிகளும், 200 உள் நோயாளிகளும் இலவசமாக சிகிச்சை பெறுகின்றனர்.