Categories
உலக செய்திகள்

உலகிற்கு ஆபத்து…! ”3ஆம் உலகப்போருக்கு வாய்ப்பு” எச்சரிக்கும் தலைமை தளபதி…!!

மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான சூழல் இருப்பதாக பிரிட்டன் தலைமை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டன் நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் நிக் கார்டர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார். அப்போது பேசிய அவர், “பல காலங்களில் பொருளாதார நெருக்கடி தான் பாதுகாப்பு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால்  தற்போது உலகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும். நாம் அனைவருமே பாதுகாப்பற்ற உலகில் தற்போது வாழ்ந்து வருகிறோம். பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டுவிட்டது.

இது மிகப் பெரிய போராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதுவே தற்போது ஏற்பட உள்ள உண்மையான ஆபத்து. இதிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மோதலில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்களின் செயல்களால் நாடுகளிடையே போர் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இதனால் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஆயுதங்களுடன் பலர் சண்டையில் இறங்கக் கூடும். இதுவே போருக்கு வழிவகுக்கும். மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்து விடக்கூடாது.

அதனை நாம் உறுதியாக மனதில் நிறுத்த வேண்டும். கடந்த நூற்றாண்டுகளை பார்க்கும்போது நடந்து முடிந்த இரண்டு உலகப் போர்களும் தவறான முடிவுகளால் நடத்தப்பட்டது. யாராலும் அதனை மறுக்க முடியாது. அது போன்ற ஒன்றை மீண்டும் நடக்க விடக்கூடாது என உறுதியாக இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப்போர் நடக்குமா என்றால் அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறுவேன். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றே நினைக்க தோன்றுகிறது” என கூறியுள்ளார்.

Categories

Tech |