Categories
உலக செய்திகள்

உலகிற்கே நம்பிக்கை கொடுத்த கொரோனா தடுப்பூசி… கண்டுபிடித்த ஆச்சரிய தம்பதிகள்… இதான் அவர்களின் பின்னணியாம் ….!!

Pfizer கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு பின்னணியில் இரண்டு மருத்துவ தம்பதிகளின் பங்களிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனமான Pfizer கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது 90% செயல்திறன் உடையது எனவும் அறிவித்துள்ளது. எனவே இந்த செய்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனம் மட்டும் கண்டுபிடித்ததல்ல. இதனுடன் BioNTech என்கிற ஜெர்மனி நிறுவனமும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளது. இந்த ஜெர்மனி நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பின் பின்னனணியில் இருக்கும் தம்பதிகள் Ugur Shahin(55) – Oezlem Tuereci(53). மருத்துவர்களான இவர்கள் மருத்துவ ஆராய்ச்சியின் மேல் அளவு கடந்த காதல் கொண்டவர்கள் ஆவர்.

இந்த ஆச்சர்ய தம்பதி தங்களுடைய திருமண நாளில் கூட ஆய்வகத்துக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளனர். பல மில்லியன் மதிப்புள்ள இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான sahin எளிமையான முறையில் வேலைக்கு சைக்கிளில் வருவது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது. இவர்கள் இருவருமே அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் குறித்து படிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த இரு தம்பதிகளும் துருக்கியை பூர்வீகமாக கொண்டவர்கள். இந்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பை அடுத்து இத்தம்பதியர் புற்று நோய் மற்றும் காசநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |