ஜெர்மன் அதிகாரிகள் உருமாறிய கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் தன்மை வாய்ந்தது என்று நிரூபித்துள்ளனர்.
தற்போது உலகை நடுங்க வைத்து கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த தொற்றுநோய்கான ராபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் பிரிட்டன், டென்மார்க் ,நெதர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுக்கான முடிவுகளை ஆய்வு செய்ததில் இந்த கொரானா வைரஸ் பழைய கொரோனா வைரஸை விட வேகமாக பரவும் தீவிரத்தன்மை கொண்டது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் முடிவுகள் சொல்வது என்னவென்றால், முந்தைய கொரோனா வைரஸை விட அதிவேகத்தில் பரவும் என்பதை குறிக்கின்றன. குறிப்பாக சொல்லப்போனால் பழைய கொரோனா தொற்றை விட பிறருக்கு பரவுவது 0.5 அதிகமென ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்கள். உருமாறிய கொரோனா வைரசால் பிரிட்டன் நாடு தற்போது அவதிப்பட்டு வரும் நிலையில் ஜெர்மன் ஆய்வாளரின் இந்த தகவல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .