Categories
அரசியல்

உலகிற்க்கே டப் கொடுக்கும் தமிழகம்…. மாஸ் காட்டி கலக்கும் சுகாதாரத்துறை ..!!

தமிழகத்தில் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு  1,86,492 ஆக அதிகரித்துள்ளது. அதே போல 4,910-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,31,583 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 89,561ஆக உயர்ந்துள்ளது. புதிதாக  74 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி 3,144 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 51,765ஆக உள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட  70.56 % பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் நேற்று  மட்டும் 58,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் 20,15,147 பேருக்கு கொரோனா பரிசோதனையை செய்து தமிழகசுகாதாரத்துறை அசதியுள்ளது. நாட்டிலேயே அதிக பரிசோதனை செய்தது மட்டும் இல்லாமல் உலகளவில் தமிழகத்தை விட 81 நாடுகள் அதிக பரிசோதனை செய்துள்ளன. 215க்கும் அதிகமான நாடுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில் 134 நாடுகளின் மொத்த பரிசோதனை தமிழகத்தை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |