சமூக வலைதளங்களில் கொரோனா வைரசுக்கு முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கபட்டது என்ற தகவல் வைரலாகி வருகின்றது.
உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வைரலானது. உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக பார்க்கப்பட்ட இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ரஷ்ய நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் என்ற செய்திகள் அந்நாட்டு ஊடகம் வாயிலாக வெளியானது.
உண்மை நிலவரம் என்னவென்றால் தடுப்பு மருந்து பரிசோதனை முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றதாகவும் இன்னும் பல கட்ட பரிசோதனை கடக்க வேண்டியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.ரஷ்யா கொரோனா வைரசுக்கு முழுமையான தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டது என்ற தகவல் உண்மை இல்லை என்பதால் மக்கள் ஏமாற்றத்துடன் கொரோனா வைரசுக்கான தடுப்புமருந்திற்காக காத்து கொண்டிருக்கின்றனர்.