உலகிலேயே மிகவும் ஆபத்தான எறும்பு எது என்று உங்களுக்கு தெரியுமா?… உலகிலேயே மிகவும் ஆபத்தானது புல்டாக் எறும்புகள். இந்த எறும்புகள் Myrmecia ant என்றும் அழைக்கப்படுகிறது. 1804 ஆம் ஆண்டு டெனிஸ் விலங்கியல் நிபுணர் ஜோஹன் கிறிஸ்டியன் என்பவரால் முதன் முதலில் நிறுவப்பட்ட எறும்புகளின் இனம். இதுதான் எறும்புகளின் மிகப்பெரிய இனமாகும். இதில் குறைந்தது 93 இடங்கள் ஆஸ்திரேலியா மற்றும் அதன் கடலோர தீவுகள் முழுவதும் காணப்படுகின்றது.
இந்த எறும்புகள் பொதுவாக காளை எறும்புகள் மற்றும் புல்டாக் எறும்புகள் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றிற்கு பார்வை திறன் மிகவும் அதிகம். நீண்ட தூரத்தில் உள்ள தங்களின் இரையை முன்னரே அறிந்து கொள்ளும். இவற்றின் கூடுகள் பெரும்பாலும் மண்ணில் காணப்படும். ஆனால் அவை அழுகிய மரத்திலும் பாறைகளின் கீழும் காணப்படுகின்றன. அதன் கூடுகளை யாராவது கலைத்து விட்டால் உடனே குதித்து வந்து கடித்து விடுமாம்.
உலகிலேயே குதிக்கும் தன்மை கொண்டதே இந்த வகை எறும்புகள் தான். அதுமட்டுமல்லாமல் இந்த எறும்புகள் 1.5 இன்ச் வரை வளரக்கூடியது. இந்த எறும்புகளின் விஷம் பூச்சி உலகில் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த எறும்பு கடித்த 15 நிமிடத்தில் உயிர் இழந்து விடுவார்கள். இந்த வகை எறும்புகள் 8 முதல் 10 வாரங்கள் வாழக்கூடியது. இந்த எறும்புகளில் பல்வேறு வகைகள் உள்ளன. இவ்வளவு ஆபத்து நிறைந்த எறும்பு என்பதால் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான எறும்பு இதுதான்.