இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிறு தோறும் நாட்டு மக்களிடையே மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுவார்.
அந்தவகையில் இன்று உரையாற்றிய அவர், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே மக்கள் அனைவரும் மூச்சி பயிற்சி செய்யுங்கள். அதன் மூலம் நுரையீரல் விரிவடைந்து நல்ல பலன் கிடைக்கும். கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். உலகிலேயே இந்தியாவில் தான் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.