Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம்….. அக்டோபர் 21ஆம் தேதி திறப்பு….!!!!

துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி துபாயில் புளு வாட்டர்ஸ் தீவில் ஒரு பிரம்மாண்ட ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐன் துபாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்டினம் உலகின் மிகப் பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம்.

இந்த ராட்டினம் 250 மீட்டர் உயரம் ஆகும். பிரிட்டனின் லண்டனிலுள்ள லண்டன் ஐ ராட்டினத்தை விட இரண்டு மடங்கு அதிக உயரம் கொண்டது. இந்நிலையில் இந்த ராட்டினம் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு இந்த ராட்டினம் திறக்கப்படுகிறது. இந்த ராட்டினத்தில் ஒரு முழு சுற்று வர 38 நிமிடங்கள் ஆகும்.

Categories

Tech |