தி மார்னிங்கன்சல்ட் நிறுவனமானது உலகிலேயே மிகவும் பிரபலமடைந்த தலைவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. இப்பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது, அந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 % பேர் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.
2-வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூரஸ் மானுவல் லோபஸ் 63 % , 3-வது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 54 %, 4-வது இடத்தில் பிரேசில் அதிபர் போல்சனரோ 42 %, 5-வது இடத்தில் அமெரிக்க அதிபர் பைடன் 41 % பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதன்பின் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 25 % ஆதரவுடன் 10-வது இடத்தில் இருக்கிறார். சென்ற வருடம் நவம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.