பரந்து விரிந்த இந்த உலகில் தினம் தினம் விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி இந்த பூமியில் உருவான மிக அதிக சத்தம் எது என்று உங்களுக்கு தெரியுமா?… 1883 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுக்கு இடையே கிரகவோட தீவிலுள்ள எரிமலை வெடித்த சத்தம் 310 டெசிமல் அளவிற்கு இருந்தது.
இந்த சத்தம் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்களால் கேட்கப்பட்டது. கிரகடோவில் இருந்து சுமார் 200 மைல் தூரத்தில் வசிக்கும் மேற்கு ஆசியா மக்களுக்கு கூட இந்த சத்தம் கேட்டுள்ளதாம்ம். அந்த சத்தம் பீரங்கியில் இருந்து வரும் வெடிகுண்டு சத்தம் போல இருந்துள்ளது. சுமார் 3000 மைல் தூரத்தில் உள்ள நாட்டில் இருக்கக்கூடிய ஒரு சில மக்கள் கூட இந்த சத்தத்தை உணர்ந்துள்ளனர். இதுவே பூமியில் உருவான மிக அதிக சத்தம் என்று கூறப்படுகிறது.