சீன விஞ்ஞானிகள் உலகிலேயே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர்.
சீன நாட்டின் விஞ்ஞானிகள் உலகிலேயே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர். இது கடல்மட்டத்திலிருந்து 8,830 மீட்டர் உயரத்தில் அதாவது எவரெஸ்ட் மலை சிகரத்தின் உச்சியில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வானிலை ஆய்வு மையத்தில் தானியங்கி நிலையத்தின் இயக்கத்தையும் தகவல் பரிமாற்றத்தையும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளனர்.
குறிப்பாக எவரெஸ்ட் சிகரத்தில் அமைந்துள்ள 7வது வானிலை ஆய்வு மையம் இதுவே என்று சீனா கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வானிலை ஆய்வு மையத்தில் நேபாள எல்லையில் உள்ள மலைப்பகுதிகளில் ஏற்படும் மழைப்பொழிவு மற்றும் பனிக்கட்டி ஆகியவற்றின் அடர்த்தியை துல்லியமாக தெரிந்து கொள்ள ரைடர் வசதியும் வைத்துள்ளனர்.