நம் ஊர் பகுதிகளில் உள்ள தெருக்கள் பெரும்பாலும் 2 கிலோ மீட்டர் அல்லது 10 கிலோ மீட்டர் அல்லது 20 கிலோ மீட்டர் வரை இருக்கும். தெருக்களில் வரிசையாக இரண்டு பக்கங்களும் வீடுகள் அமைந்திருக்கும். ஆனால் உலகிலேயே மிகப் பெரிய தெரு ஒன்று உள்ளது. இந்த தெரு இந்தியாவில் பாதியை கொண்டது என்று கூறப்படுகிறது.
அந்த தெருவானது யோங்கே என்று அழைக்கப்படுகிறது. யொங்கே என்பது கனேடிய மாகாணமான ஒன்டாரியோவில் உள்ள ஒரு பெரிய வழி, டொராண்டோவில் உள்ள ஒன்டாரியோ ஏரியின் கரையை சிம்கோ ஏரியுடன் இணைக்கிறது, இது பெரிய ஏரிகளுக்கான நுழைவாயிலாகும். இது உலகின் மிக நீளமான தெருவாக மாறியது. இது 1,896 கிமீ (1,178 மைல்) நீளம் கொண்டது.