உலகின் மிக விலை உயர்ந்த தலையணை நெதர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விட இந்திய மதிப்பில் சுமார் 45 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது. தங்கம், வைரம் மற்றும் நீல மணி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் ரூபாய் மதிப்பில் இதன் விலை இரண்டு கோடியாகும். சுமார் பதினைந்து வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த தலையணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது கூடுதல் வசதிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தங்கம், வைரம் மற்றும் நீல மணி ரத்தினம் போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் தான் இதன் விலை மதிப்பு அதிகம். இந்த தலையணைக்குள் இருக்கும் பஞ்சு ரோபோ அரைக்கும் இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த தலையணையின் ஜிப்பில் நான்கு வைரங்கள். இது சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதில்லை. இது ஒரு பிராண்டட் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தூக்கமின்மை உள்ளவர்களுக்கு தூங்குவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.