உலகில் எங்கு போர் நடந்தாலும் குண்டுகள் வீசப்படுவது வழக்கம்தான். அதில் பேரழிவு தரக்கூடிய ஆபத்தான குண்டுகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
1.Cluster Bomb
இதற்கு தமிழில் கொத்துக் குண்டு என்று பெயர். இது பலநூறு சிறிய வெடி கலன்களை வெளியே தள்ளும் சிறிய குண்டு. இது பரந்த பரப்பளவில் விழுந்தடித்து அழிவை உண்டாக்கும். வானில் இருந்து விமானம் மூலமாக அல்லது தனி ராக்கெட் மூலமாக இந்த குண்டுகள் வீசப்படும். தரையிலிருந்து கூட இதனை வீசலாம். இது மேலிருந்து வரும் போது மூன்று பகுதிகளாகப் பிரிந்து 100 குண்டுகளை வெளியே தள்ளும்.
அது பின்பு வெடித்து சிதறும். வீசப்பட்ட பல காலம் பிறகும் வெடிக்காத வெடிகளை வெடித்து பெரும் அழிவை ஏற்படுத்த வல்லவை. அதனால் இந்த குண்டுகளை போரில் பாவிப்பதில்லை என்று 94 நாடுகள் மே மாதம் 2008 ஆம் ஆண்டு ஒரு பன்னாட்டு உடன்படிக்கை செய்தன. இருந்தாலும் இலங்கைப் படைத்துறை ஈழத்தமிழர்களுக்கு எதிராக இதனை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது
2.Vacuum Bomb
Vacuum boom என்பது வெற்றிட குண்டு என்று அழைக்கப்படுகிறது. வெற்றிட குண்டுகள் அல்லது வால்யூ மெட்ரிக் குண்டுவெடிப்பு வெடிமருந்துகள் என்பது ஒரு வகையான வெடிமருந்து ஆகும். இது பலநூறு ஆண்டுகளாக மனித குலத்திற்கு தெரிந்த ஒரு அளவீட்டு வெடிப்பை உருவாக்கும் கொள்கையில் செயல்படுகிறது. இந்தவித குண்டு ஒன்று ஒரே வீச்சில் இரண்டு முறை வெடிக்கும். மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கும். இந்த குண்டு தரையைத் தொட்டதும் பெரும் புகையை உண்டாகும். அக்கம்பக்கம் உள்ள அனைத்து பிராண வாயுவையும் உறிஞ்சும். அதாவது ஆக்ஸிஜனை யாராலும் சுவாசிக்க முடியாது.
அந்தப் புகை எனும் காற்று மண்டலம் பயங்கரமான எரிபொருள் ஆகும். சிறு ஓட்டையில் உள்ள எல்லா இடங்களிலும் அந்த புகை பரவும். அந்தப் புகை எங்கெல்லாம் பறவை அதோ சிறிது நேரத்தில் அங்கிருக்கும் மனிதர்கள் அனைவரும் இறந்து விடுவர். நொடிப்பொழுதில் மனித உடலை எல்லாம் சாம்பலாகி விடும். இது மோசமான அணுகுண்டு. இது தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தும் நாடு போர்க்குற்றத்திற்கு ஆளாகும்