ரஷ்யாவில் H5N8 வகை பறவை காய்ச்சல் வைரஸ் முதன்முதலில் ஒரு மனிதருக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது .
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் ரஷியாவில் H5N8 எனும் புதிய வகை பறவை காய்ச்சல் பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .ரஷ்யா ,சீனா ,ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் H5N8 பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வகை வைரஸ் பெரும்பாலும் கோழிப்பண்ணைகளில் மட்டுமே பாதித்தது. ஆனால் இப்போது முதன்முதலாக ரஷ்யாவின் பறவைகளிடமிருந்து ஒரு மனிதருக்கு பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியா இந்த பாதிப்பை குறித்து உலக சுகாதார அமைப்பிடம்(WHO) கூறியுள்ளது. பறவை காய்ச்சல் இதுவரை மனிதர்களிடம் H5N1 ,H7N9 மற்றும் H9N2 இன்ஃப்ளூயன்சா வைரஸ் மட்டுமே மனிதர்களுக்கு பரவியதாகவும் இந்த புதிய வகை H5N8 முதல் முறையாக மனிதர்களுக்கு பரவியுள்ளது என்று தெரிவித்துள்ளது.