உலகின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் -ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற உலக இந்திய மருத்துவர்கள் மாநாட்டில் காணொளி காட்சி வழியே ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார் . அப்போது பேசுய அவர், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணிகள் நாட்டில் நடந்து வருகின்றனர் என்றும், இதுவரை ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். உலகின் மருந்தகம் என்று சுட்டிக் காட்டப்படும் இந்தியா, உலகின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையமாகவும் உருவாகி வருகிறது என்று அவர் கூறினார்.