தஞ்சையைச் சேர்ந்த ரியாஸ்தீன் என்ற 18 வயது மாணவர் உருவாக்கியுள்ள, உலகிலேயே மிக எடைக் குறைவான இரண்டு செயற்கைக்கோள்களை, அமெரிக்காவின் நாசா விண்ணில் ஏவவுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த I DOOLE LEARNING என்ற நிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து, cubs in Space என்ற பெயரில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்தும். இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், 73 நாடுகளிலிருந்து பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்டுபிடிப்புகளிலில், தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை, உலகிலேயே மிக எடை குறைவான Sub-Orbital Femto செயற்கைக் கோளாகும். Atmospheric and Space Studies and Microgravity Material Research குறித்து இந்த செயற்கைக்கோள்கள் தகவல்களை அளிக்கும். அடுத்தாண்டு இந்த செயற்கைக்கோள்களை நாசா விண்ணில் செலுத்த உள்ளது.