உருமாற்றமடைந்து வரும் கொரோனா தொற்றால் உலகில் ஒருவரும் பாதுகாப்பாக இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா தீவிரமாக பரவி வருவதால் உலகில் எவரும் பாதுகாப்புடன் இல்லை என்று நிபுணர்களின் குழு உறுதியாக கூறியுள்ளது. இதற்கான ஒரே தீர்வு உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் என்று 50 அமைப்புகளை சேர்ந்த ஒரு குழு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அமைப்பு, வளர்ந்துவரும் பல்வேறு நாடுகள் வரும் 2024 ஆம் ஆண்டு வரை கொரோனோவை முடிவுக்கு கொண்டுவர தேவையான தடுப்பூசியை மக்களுக்கு அளிக்காது என்று எச்சரித்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் உருமாற்றமடைந்த வீரியமிக்க வைரஸ் மற்றும் புதிதாக ஏற்படும் கொரோனா அலை போன்றவற்றால் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மக்களுக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் கொரோனா அலையை கட்டுப்படுத்த திண்டாடி வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் போன்ற நாடுகள் விதிமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்துவது ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும் வரை யாரும் பாதுகாப்புடன் இல்லை என்ற உண்மையை உணர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்குக் காரணம் உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.