Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகில் ஒரு சில வீரர்களால் மட்டுமே இப்படி விளையாட முடியும்…. தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து தள்ளிய சச்சின்….!!

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகவும் அபாரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அணி 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதற்கு இந்த அணியிலுள்ள தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டம் தான் மூலகாரணமாக உள்ளது. இவர் மிகவும் சூப்பராக விளையாடி பெஸ்ட் பினிஷராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

அதாவது தினேஷ் கார்த்திக்கிடம் மைதானத்தின் 360 டிகிரியிலும் சுழன்று அடிக்கும் திறமை உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக் முதல் பந்திலிருந்தே தனது அதிரடியை தொடங்குவது தான் அவரது ஹைலைட் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் உலகில் ஒரு சில வீரர்களால் மட்டுமே இப்படி விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |