சென்னை வளாகத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகிகளும் நடிகையுமான சி ஆர் சரஸ்வதி எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அதாவது பொதுக்குழு கூட்டத்தில் பேசி அவர்,துரோகம் என்ற சொல் உலகில் இருக்கும் வரை முட்டி போட்டு முதலமைச்சரான எடப்பாடியை மறக்க முடியாது . துரோகம் செய்தவர்களுக்கு என்றும் மன்னிப்பே கிடையாது. நிச்சயம் ஒரு நாள் அதிமுக முழுமையாக கைப்பற்றப்படும் .அப்போது கட்டாயம் துரோகம் செய்த அனைவருக்கும் தக்க பாடம் புகட்டப்படும் என கடுமையாக விமர்சித்து அவர் பேசியுள்ளார்.